×

நாகர்கோவிலில் பிளாட்பார்ம் நீளம் குறைவு எதிரொலி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டி குறைப்பு

நாகர்கோவில், பிப்.6: பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்டு சிட்டிங் பெட்டி ரிசர்வேஷனாக மாற்றப்பட்டுள்ளது.பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 30ம் தேதி கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டது. 21 பெட்டிகள் கொண்ட ரயிலில் 22 பெட்டிகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.ஆனால் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் வசதி குறைவால் இது திரும்ப பெறப்பட்டது. தற்போது மீண்டும் 21 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது.இந்தநிலையில் தற்ேபாது உள்ள ஒரு பொது பெட்டி நேற்று முன்தினம் முதல் ரிசர்வேஷன் பெட்டியாக மாற்றப்பட்து. இதனால் தினசரி ரயிலை பயன்படுத்தும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். முழு முழுக்க பொது பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட்டாலும் இந்த ரயிலில் கூட்டம் நிரம்பி வழியும் நிலைதான் உள்ளது.


Tags : Ecoleil Parasuram ,
× RELATED நாகர்கோவிலில் பிளாட்பார்ம் நீளம்...